பாமக தலைவராக தன்னை பதிவு செய்யும்வரை தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும் - ராமதாஸ் தொடர்ந்துள்ள புதிய வழக்கு இன்று விசாரணை
சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச) பாமக தலைவராக தன்னை பதிவு செய்யும்வரை தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள புதிய வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. பா.ம.க. கட்சியின் உரிமை தொ
Anbumani


சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச)

பாமக தலைவராக தன்னை பதிவு செய்யும்வரை தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று

பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள புதிய வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

பா.ம.க. கட்சியின் உரிமை தொடர்பாக தலைவர் அன்புமணிக்கும், நிறுவனர் ராமதாசுக்கும் இடையில் மோதல் நடந்து வரும் சூழலில், கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளதாக, தேர்தல் ஆணையம், அன்புமணி முகவரிக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

இந்த கடிதத்தை ரத்து செய்து, தனது முகவரிக்கு கடிதம் அனுப்ப உத்தரவிடக் கோரியும், கட்சி நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கடந்த 2025 மே மாதமே பதவிக்காலம் முடிந்த நிலையில், கட்சியின் தலைவராக நீடிப்பதாக போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக அன்புமணி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கட்சி நிறுவனர் என்ற முறையில் தனது அங்கீகாரம் இல்லாமல், சட்டவிரோதமாக கட்சி கூட்டங்களை நடத்தி அன்புமணி உரிமை கோர முடியாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு

தேர்தல் ஆணையம் மூன்று வாரத்துக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

தேர்தல் ஆணையம் சூழ்ச்சியால் மாம்பழம் சின்னம் முடக்க வாய்ப்புள்ளதாகவும் எனவே பாமக தலைவர் தான் மட்டுமே என்பதை பதிவு செய்யும் வரை தமிழகம் மற்றும் புதுவை தேர்தல் அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தை பிரதிவாதியாக சேர்த்துள்ளார்.இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வர உள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ