Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 20 பிப்ரவரி (ஹி.ச.)
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாய்க்கால்ரோடு பகுதியில் தவெக
சார்பில் தேர்தல் பணிகளை தவெக நிர்வாக்குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்
கலந்து கொண்டு பொதுமக்களிடையே விசில் சின்னம் குறித்த துண்டு பிரசுரங்களை
வழங்கி விசில் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தவெக சார்பில் முதல் முறையாக 1வது வார்டில் தேர்தல் பணிகளில் துண்டு
பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிப்பை தொடங்கியுள்ளேன்.
குறிப்பாக தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் தமிழகம் முழுவதும்
ஒரே கருத்தோடு அரும்பணியாற்றி வருகின்றனர்.
18வயது முதல் 45வயது உள்ளவர்கள் வரை
தமிழகத்தை விஜய் ஆளவேண்டும் என நினைக்கின்றனர்.
பலவிதிமுறைகள் காரணமாக குறிப்பிட்ட மக்களை தான் சந்திக்க முடிகிறது எம்.ஜி.ஆர் ஜெயலலிதா நல்லாட்சி
கொடுக்கவில்லையா என்று கேட்க்கலாம் ஆனால் அவர்களுக்கு பிறகு இவர் தான் நல்லாட்சி வழங்க முடியும்.
100நாட்கள் வேலை திட்டத்தை பற்றி அதிமுக திமுக பேசவில்லை. 100நாட்கள் வேலை திட்டத்தில் மத்திய அரசு நிதி வழங்கவில்லை
100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு 60 சதவீதம் மாநில அரசு 40 சதவீதம் நிதி வழங்வில்லை. தவெக பொருத்தவரையில் 100நாட்கள் வேலை திட்டத்தில் தெளிவான முடிவு எடுக்கப்படும்.
தேமுதிக கூட்டணி சேர்ந்திருப்பது குறித்து கேட்டபோது அவர்கள் விருப்பம் எங்கு
இருந்தாலும் வாழ்க.
தவெக கூட்டணிக்கு நிச்சயம் வருவார்கள் தேர்தல் சமயத்தில் வாய்ப்பு
கிடைக்காதவர்கள் வர வாய்புள்ளது பொருத்திருந்து பாருங்கள் ஒவ்வொரு கட்சியிலும் இருக்கின்றவர்கள் 5சீட் 6சீட் கேட்க்கின்றனர் ஆனால் ஒருவருக்கு
மட்டும் தான் சீட் வழங்க போகின்றனர் ஆனால் ஒவ்வொரு தொகுதிகளும் செல்வாக்கு மிக்கவர்கள் இரண்டு மூன்று பேர் உள்ளனர் ஒவ்வொருவரும் தனி இயக்கத்தை
ஆரம்பிக்கின்றன. கூட்டமைப்பை பொறுத்தவரை தலைவர் விஜய் தான் முடிவெடுப்பார்.
மாணிக்கம்தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பல்வேறு தரப்பினரும் குரல்
எழுப்பி வருவது குறித்து கேட்டபோது தபிழகத்தின் மனநிலை அப்படி தான் உள்ளது. அதற்கேற்ப அரசியல் வாதிகளின் மனநிலையும் அப்படிதான் உள்ளது.
கோடைகால நிவரண நிதி அறிவிப்பு குறித்த கேட்டபோது இதுகோடை கால நிவாரண நிதி அல்ல
தேர்தல் கோடைகாலமாக உள்ளது.
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் வருவார்கள் பொருத்திருந்து பாருங்கள்
என்றும் ,தேர்தல் அறிக்கை விஜய் ஆய்வு செய்து கொண்டுள்ளார்.
இருகட்சியினரின் தேர்தல்
அறிக்கை வெளியான பிறகு எதிர்கால் தமிழக மக்கள் எதிர்பார்க்கும் வகையில் தெளிவான தேர்தல் அறிக்கையாக வெளியாகும் என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam