ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சிறை கைதி உயிரிழப்பு
சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச.) தாம்பரம் சங்கர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் புனிதனை கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த தனியார் பாரில் ஏற்பட்ட சண்டை தொடர்பான வழக்கில் கடந்த ஆறு நாட்களுக்கு முன்பாக அவரை உன் மீது நான் பைலபில் வாரண
உயிரிழப்பு


சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச.)

தாம்பரம் சங்கர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும்

புனிதனை கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த தனியார் பாரில் ஏற்பட்ட சண்டை தொடர்பான

வழக்கில் கடந்த ஆறு நாட்களுக்கு முன்பாக அவரை உன் மீது நான் பைலபில் வாரண்ட்

உள்ளது என்று மூன்று போலீசார் புனிதனை அழைத்துச் சென்று இருக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் புனிதன் உடல்நிலை மோசமாக உள்ளது என்று அவருடைய

வீட்டிற்கு போலீசார் தகவல் தெரிவித்து இருக்கின்றனர்.

அந்த தகவலின் பெயரில் உறவினர்கள் மற்றும் தாய் மனைவி ஆகியோர் நேரில் சென்று பார்த்தனர். அப்போது உயிருக்கு போராடிக் கூடிய நிலைமையில் புனிதன்

இருந்திருக்கிறார் மேலும் அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்திருக்கிறது.

புனிதனுக்கு ஏற்கனவே உடல்நிலை குறைபாடு இருந்ததாகவும் அவரது தாய் தெரிவித்து

இருக்கிறார் அவரை கைது செய்து அழைத்துச் செல்லும்போதும் உடல்நிலை சரியில்லை

என்று தெரிவித்த போதும் போலீசார் அவரை அழைத்துச் சென்று சரியாக உடல் பரிசோதனை

செய்யாமல் சிறையில் அடைத்து துன்புறுத்தியதால் தான் தனது மகன் இறந்து விட்டார் என்று தாய் குற்றம் சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயர்ந்தார் அவரது உடலை

பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும்போது உறவினர்கள் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இன்னும் சற்று நேரத்தில் அவரது உடல் ஆனது பிரேத பரிசோதனை செய்ய உள்ளது.

இந்த நிலையில் கடைசியாக அவரை மூன்று போலீசார் வீட்டில் இருந்து காவல் நிலையம்

அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியானது.

Hindusthan Samachar / GOKILA arumugam