ஆரணி அருகே புகழ்பெற்ற ஏரி குப்பம் என்கிற சனீஸ்வர பகவான் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை, 20 பிப்ரவரி (ஹி.ச ) திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பழமை வாய்ந்த எந்திர சனீஸ்வர பகவான் ஆலயமாக திகழ்ந்து வருகிறது. இந்த ஆலயத்தில் 2 1/5 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த விழாவிற்கு வ
எந்திர சனீஸ்வரன்


திருவண்ணாமலை, 20 பிப்ரவரி (ஹி.ச )

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பழமை வாய்ந்த எந்திர சனீஸ்வர பகவான் ஆலயமாக திகழ்ந்து வருகிறது.

இந்த ஆலயத்தில் 2 1/5 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த விழாவிற்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த ஆலயத்தில் வாராவாரம் சனிக்கிழமை தோறும் பரிகாரம் மற்றும் யாகம் ஆகியவை

நடைபெற்று பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது.

இன்று இந்த ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு முன்னதாக எந்திர

சனீஸ்வர பகவானுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு யாக சாலை அமைத்து முதல் கால பூஜை,

இரண்டாம் பல பூஜை, பூர்ணாஹதி தம்பதி சங்கல்பம் கோ பூஜை ஆகியவை நடைபெற்றன.

இன்று சரியாக 9 மணி அளவில் எந்திர சனீஸ்வர பகவான் ஆலயத்தில் கலசத்திற்கு புனித

நீர் ஊற்றப்பட்டது.

மேலும் அந்தப் புனித நீரை ட்ரோன் மூலம் மக்களுக்கு தெளித்தனர். இந்த

கும்பாபிஷேகத்தை ட்ரோன் காட்சிகளின் மூலம் படம் பிடித்து காட்டப்பட்டுள்ளது.

இந்த கும்பாபிஷேக விழாவிற்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலத்திலிருந்து

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam