ஐக்கிய நாடுகள் சபையை பலப்படுத்த திட்டம் - டிரம்ப் அதிரடி
வாஷிங்டன், 20 பிப்ரவரி (ஹி.ச.) காசா முனை மறுசீரமைப்புக்கான சமாதான கவுன்சில் தொடர்பான ஆரம்ப கட்ட ஆலோசனைக் கூட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்தினார். இந்த சமாதான கவுன்சிலின் பணிகளுக்காக 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்படும் என அறிவிக்கப்பட
ஐக்கிய நாடுகள் சபையை பலப்படுத்த திட்டம் - டிரம்ப் அதிரடி


வாஷிங்டன், 20 பிப்ரவரி (ஹி.ச.)

காசா முனை மறுசீரமைப்புக்கான சமாதான கவுன்சில் தொடர்பான ஆரம்ப கட்ட ஆலோசனைக் கூட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்தினார்.

இந்த சமாதான கவுன்சிலின் பணிகளுக்காக 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

அக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகையில்,

காசா முனையை மேம்படுத்துவதற்கான சமாதான கவுன்சிலுக்கு சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை (1 பில்லியன் என்பது நூறு கோடி) ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையுடன் தோளோடு தோள் சேர்ந்து செயலாற்ற உள்ளோம். அவர்களை மீண்டும் நமது கூட்டுக்குள் அழைக்க இருக்கிறோம்.

இதற்கு முன்பு நான் எட்டு யுத்தங்களில் ஒன்றைப்பற்றி கூட அவர்களிடம் கலந்தாலோசித்ததில்லை. ஆனால் இனிவரும் காலங்களில் எல்லாவற்றையும் பற்றி விவாதிக்க கடமைப்பட்டுள்ளேன் என்றார்.

ஒருவேளை நான் இல்லாத பட்சத்திலும், ஐ.நா. சபை வலிமையுடன் செயல்படும் என்று நம்புகிறேன். இந்த சமாதான கவுன்சில் ஐ.நா. சபையின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து, அதன் செயல்திறனை உறுதி செய்யும். ஆகையால், ஐக்கிய நாடுகள் சபையை வலுப்படுத்த நாம் அனைவரும் ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்.

அதன் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அவர்களுக்கு நிதி உதவி உட்பட பல்வேறு உதவிகள் தேவைப்படுகின்றன. அவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்.

என்று டிரம்ப் தெரிவித்தார்.

Hindusthan Samachar / JANAKI RAM