Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச)
தமிழக வெற்றிக் கழகத்தில் சமீபத்தில் கட்சியின் மாநில செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் விஜய் தலைமையில் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் தேர்தல் நெருங்கும் வேலையில் தேர்தல் பணிகள் தொடர்பாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் அந்த சட்டமன்ற தொகுதியை சேர்ந்த கட்சியின் நிர்வாகிகளை அழைத்து செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
தொகுதியில் இருக்கும் நகர நிர்வாகிகள், பேரூர் கிளை கழக நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து மட்ட நிர்வாகிகளையும் அழைத்து செல்வதற்கு கூட்டத்தை நடத்தி தேர்தல் பணிகள் குறித்து அவர்களுக்கு விளக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது
ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 5 தேர்தல் பணிமனைகளை அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் சில அறிவுறுத்தல்கள் கூட்டத்தில் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது
Hindusthan Samachar / P YUVARAJ