Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 20 பிப்ரவரி (ஹி.ச.)
பாண்டிச்சேரியை சேர்ந்த 18 வயதுடைய இளம்பெண் ஒருவர் ஒருவர் அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.இ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 9/2/26 அன்று சென்னை வடபழனியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஒர்க்ஸ் ஷாப் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவதற்காக மாணவி சென்னை வந்துள்ளார்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் மாணவி வடபழனி பகுதியில் உள்ள பிரபல மாலுக்கு (ஃபோரம் மால்) சுற்றி பார்க்க சென்றார்.
அங்கு மூன்றாவது தளத்தில் உள்ள புட்கோட்டில் உணவு சாப்பிட சென்ற மாணவி அருகில் உள்ள மேசையில் லேப்டாப், செல்போன் வைத்திருந்த பையை வைத்து விட்டு உணவு வாங்கி வந்து பார்த்த போது பை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் மாணவி இது குறித்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவயிடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து போலீஸார் நேற்று இரவு மாணவியின் லேப்டாப் செல்போன் ஆகியவற்றை திருடி சென்ற நபரை ராயப்பேட்டை பகுதியில் வைத்து கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கோவை மாவட்டத்தை சேர்ந்த முகமது நூரூல்லா (42) என்பதும், சென்னை தங்கி கேட்டரி சர்வீஸ் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது .
பின்னர் போலீஸார் அவரிடம் இருந்து லேப்டாப் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ