Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 20 பிப்ரவரி (ஹி.ச.)
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட சாலாமேடு பகுதியில் வசித்து வருபவர் சங்கர்(55). கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வரும் சங்கரின் மகனுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
அப்போது சீர்வரிசையாக வந்த 25 சவரன் தங்க நகை மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை வீட்டில் வைத்து விட்டு குடும்பத்தினருடன் மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோயிலுக்கு நேற்று சென்று விட்டு இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு சங்கரும், அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது பீரோவில் வைத்திருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான 25 சவரன் தங்க நகை மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கப் பணம் உள்ளிட்டவைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து தகவலறிந்ததும் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த தடயங்களை சேகரித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து திருமணத்திற்கு சீதனமாக வந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான 25 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கைப்பட்டுள்ள சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN