ஆந்திர மாநில குண்டூரில் தொலைக்காட்சியின் ஒலியைக் குறைக்கச் சொன்னதால் கணவரைக் கொன்ற மனைவி!
குண்டூர், 20 பிப்ரவரி (ஹி.ச.) ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் டிட்கோ வீட்டுவசதிக் குடியிருப்புப் பகுதியில் ஷேக் அகமது (வயது 27) மற்றும் அவரது மனைவி கிராந்தி ஆகியோர் வாழ்ந்து வந்தனர். குளிர்சாதனப் பெட்டி பழுது பார
ஆந்திர மாநில குண்டூரில் தொலைக்காட்சியின் ஒலியைக் குறைக்கச் சொன்னதால் கணவரைக் கொன்ற மனைவி!


குண்டூர், 20 பிப்ரவரி (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் டிட்கோ வீட்டுவசதிக் குடியிருப்புப் பகுதியில் ஷேக் அகமது (வயது 27) மற்றும் அவரது மனைவி கிராந்தி ஆகியோர் வாழ்ந்து வந்தனர்.

குளிர்சாதனப் பெட்டி பழுது பார்க்கும் நிபுணராக வேலை செய்து வரும் ஷேக் அகமது, வியாழக்கிழமை இரவு இல்லத்திற்கு வந்தபோது, அவருடைய மனைவி தொலைக்காட்சியை அதிக சத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக, தொலைக்காட்சியின் சத்தத்தைக் குறைக்கும்படி ஷேக் அகமது சொல்ல, அது அவருடைய மனைவியுடன் வாக்குவாதமாக மாறியது.

விவாதம் முற்றுகையில், ஆத்திரமடைந்த கிராந்தி கத்தியால் ஷேக் அகமதுவை சரமாரியாகக் குத்தினாள். இதில், ஷேக் அகமது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உடனடியாக, காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டதும், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஷேக் அகமதுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், கிராந்தியை கைது செய்து தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / JANAKI RAM