Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 21 பிப்ரவரி (ஹி.ச.)
மகாராஷ்டிரா மாநிலத் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வின் கேள்வித்தாள் சமூக வலைத்தளத்தில் கசிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த புதன்கிழமை, நாக்பூரில் இருக்கும் தேர்வு கூடத்தில் ஒரு மாணவி தேர்வு ஆரம்பிப்பதற்கு முன்னதாக சந்தேகப்படும்படி நடந்து கொண்டார்.
அதன் பிறகு ஆசிரியர்கள் அந்த மாணவியின் கைபேசியை எடுத்து பரிசோதனை செய்தனர். அப்பொழுது, வேதியியல் தேர்வு தொடங்குவதற்கு முன்பே அந்தத் தேர்வின் கேள்வித்தாள் வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விஷயம் தொடர்பாக உடனே போலீசாருக்கு செய்தி தெரிவிக்கப்பட்டது. இது சம்பந்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில், தனியார் பயிற்சி மையத்தைச் சார்ந்த ஒருவர் பணத்துக்காக தேர்வு கேள்வித்தாளை வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, இதில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / JANAKI RAM