Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 பிப்ரவரி (ஹி.ச.)
எழும்பூரில் பராமரிப்பு பணிகள் காரணமாக 8 ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எழும்பூா் ரயில் நிலையத்தில் 10 மற்றும் 11 ஆவது நடைமேடைகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக, பயணிகளின் வசதிகளுக்காக 8 ரயில்கள் மாம்பலம் நிலையத்தில் கூடுதலாக நின்றுச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை(பிப்ரவரி 22) முதல் ஏப்ரல் 6 வரை, 8 ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்திலும் நின்றுச் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்கள் மற்றும் பயண நேர விபரம் பின்வருமாறு:
சென்னை எழும்பூர் திருச்சிராப்பள்ளி சோளன் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், 08:13 / 08:15
12633 சென்னை எழும்பூர் கன்னியாகுமரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், 17.33/17.35
16115 சென்னை எழும்பூர் புதுச்சேரி எக்ஸ்பிரஸ், 18.23/18.25
12661 சென்னை எழும்பூர் சேங்கோட்டை பொதிகை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், 19.48/19.50
12631 சென்னை எழும்பூர் திருநெல்வேலி நெல்லை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், 21.03/ 21.05
12637 சென்னை எழும்பூர் மதுரை பாண்டியன் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், 21.53/21.55
16179 சென்னை எழும்பூர் மன்னார்குடி எக்ஸ்பிரஸ், 23.08/ 23.10
22153 சென்னை எழும்பூர் சேலம் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், 00.08/ 00.10
இவ்வாறு தெற்கு ரெயில்வே கூறியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b