பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்
சென்னை, 21 பிப்ரவரி (ஹி.ச) பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா, நேற்று (NDTV) தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற போது எதிர்பாராத விதமாக திடீரென மயங்கி விழுந்தார். அப்போது நடந்த விவாதத்தின் போது அவர் நிலைகுலைந்ததைக் கண்ட
Hraja


சென்னை, 21 பிப்ரவரி (ஹி.ச)

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா, நேற்று (NDTV) தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற போது எதிர்பாராத விதமாக திடீரென மயங்கி விழுந்தார்.

அப்போது நடந்த விவாதத்தின் போது அவர் நிலைகுலைந்ததைக் கண்ட நெறியாளர் அவர் கீழே விழுந்து விடாதபடி தாங்கி பிடித்துள்ளார்.

அவருக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு, உடனடியாக சர்க்கரை வழங்கப்பட்டது.

அவர் உடனடியாக அருகில் உள்ள பாலாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு MRI மற்றும் CT Scan பரிசோதனைகள் செய்யப்பட்டன.

பாலாஜி மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், உயர் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருந்து வரக்கூடிய நிலையில் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டது.

இந்நிலையில் கடந்த மாதம்

30-ம் தேதி உள் நோயாளிக அனுமதிக்கப்பட்டு தொடர் மருத்துவ கண்காணிப்பு சிகிச்சையில் இருந்து வந்தவர் நேற்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ