தர்மபுரியில் பாஜக பெண் நிர்வாகி மீது விசிக-வினர் தாக்குதல் - ரௌடி கும்பலை காவல் துறை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் - பாஜக நாராயணன் திருப்பதி வலியுறுத்தல்
சென்னை, 21 பிப்ரவரி (ஹி.ச.) தர்மபுரி மாவட்டம் அரூரில் பாஜக பெண் நிர்வாகி ரஞ்சிதம் அவர்கள் மீது நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த குண்டர்கள் தாக்குதல் நடத்தி மிரட்டியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயண
Narayanan


He


சென்னை, 21 பிப்ரவரி (ஹி.ச.)

தர்மபுரி மாவட்டம் அரூரில் பாஜக பெண் நிர்வாகி ரஞ்சிதம் அவர்கள் மீது நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த குண்டர்கள் தாக்குதல் நடத்தி மிரட்டியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கேசவன் என்ற ரௌடி ஆபாசமாக பேசி ரஞ்சிதத்தை தாக்கியதோடு, ஜாதி ரீதியாக பேசி இழிவுபடுத்தியிருப்பது வெட்கக்கேடான செயல்.

ஆனால், இது வரை விசிக குண்டர்களை காவல்துறையினர் கைது செய்யாதது தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் அடாவடித்தனத்தை, ஜாதி வெறி அரசியலை படம் பிடித்து காட்டுகிறது.

விசிக தலைவர் திருமாவளவனின் தூண்டுதலினால் தான் இது போன்ற ஜாதி வெறி அரசியலை அக்கட்சியினர் மேற்கொள்வைத்தால் தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, ஜாதிய மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

உடனடியாக விசிக-வை சேர்ந்த கேசவன் மற்றும் ரௌடி கும்பலை அரூர் காவல் துறை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ