மதுரையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
மதுரை, 21 பிப்ரவரி (ஹி.ச.) மதுரைக்கு இன்று வருகை தந்துள்ள முதல்வர் ஸ்டாலின் மதுரை தமுக்கம் திடல் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை கட்டப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எனும் புதிய மேம்பாலத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தப் பாலம் 61 தூண்கள்,
மதுரையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்  மேம்பாலத்தை  முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்


மதுரை, 21 பிப்ரவரி (ஹி.ச.)

மதுரைக்கு இன்று வருகை தந்துள்ள முதல்வர் ஸ்டாலின் மதுரை தமுக்கம் திடல் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை கட்டப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எனும் புதிய மேம்பாலத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்தப் பாலம் 61 தூண்கள், 62 கண்களுடன் கிட்டத்தட்ட 2 கி.மீ. நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் ஏறுதளம் தமுக்கம் பகுதியில் தொடங்கி நெல்பேட்டை அண்ணாசிலை சந்திப்பில் இறங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

ரூ.213 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்தப் புதிய பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதையடுத்து, சிவகங்கையில் புதிதாக அமைக்கப்பட்ட மருது சகோதரர்களின் உருவச் சிலைகளை காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் மேம்படுத்தப்பட்ட கணினி ஆய்வகத்தைத் தொடங்கி வைக்கிறார்.

பிறகு, அங்கிருந்து வண்டியூர் புறப்படும் முதல்வர், சீரமைக்கப்பட்ட வண்டியூர் கண்மாய் பூங்கா, ஆங்குரன் அறிவியல் மையம், பேரூராட்சிகளின் புதிய அலுவலகக் கட்டடம், 867 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

Hindusthan Samachar / vidya.b