Enter your Email Address to subscribe to our newsletters

லக்னோ, 21 பிப்ரவரி (ஹி.ச.)
உத்தர பிரதேச மாநிலம், ஆரையா நகரத்திலிருந்து கல்யாண்பூர் நகரத்திற்கு சிலர் ஒரு வாகனத்தில் பயணம் செய்தனர்.
அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள். வாகன ஓட்டுநர் உட்பட மொத்தம் 10 நபர்கள் பயணித்தனர்.
இந்நிலையில், அவர்களுடைய வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
இருப்பினும், வாகனத்தை உடனடியாக நிறுத்த முடியவில்லை.
அந்த வாகனம் அருகில் இருந்த குளத்தில் பாய்ந்தது. இதில் வாகனத்தில் பயணம் செய்த அனைவரும் நீரில் மூழ்கினர்.
இது குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கினர்.
இதில், மொத்தம் இருந்த 10 நபர்களில் 6 பேர் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டனர். இருந்த போதிலும் அவர்களில் 4 பேர் உயிரிழந்தனர்.
அவர்களில் 2 பேர் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள். ஒரு குழந்தை மற்றும் ஆண் ஒருவர் இறந்தனர்.
இதனை கான்பூர் திஹாத் காவல் கண்காணிப்பாளர் ஷ்ரத்தா நரேந்திர பாண்டே உறுதிப்படுத்தியுள்ளார்.
வாகன ஓட்டுநரும் மற்றும் மற்ற 9 பேரும் கல்யாண்பூரைச் சேர்ந்தவர்கள்.
குளத்தில் மூழ்கிய வாகனத்தை மீட்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன என்று அவர் கூறினார்.
Hindusthan Samachar / JANAKI RAM