வாடகைக்கு குடியிருந்த வீட்டை காலி செய்யும்படி, உறவினருக்கு நெருக்கடி கொடுத்த உரிமையாளரை சிமெண்ட் கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கு - மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை
சென்னை, 21 பிப்ரவரி (ஹி.ச.) சென்னை, அமைந்தகரையில் உள்ள தனது வீட்டை, கோட்டீஸ்வரன் என்பவர் கண்ணகி ஆறுமுகம் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். வாடகை வசூல், பராமரிப்பு தொடர்பாக, கண்ணகி ஆறுமுகத்துக்கும், கோட்டீஸ்வரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்
சென்னை உயர்நீதிமன்றம்


சென்னை, 21 பிப்ரவரி (ஹி.ச.)

சென்னை, அமைந்தகரையில் உள்ள தனது வீட்டை, கோட்டீஸ்வரன் என்பவர் கண்ணகி ஆறுமுகம் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

வாடகை வசூல், பராமரிப்பு தொடர்பாக, கண்ணகி ஆறுமுகத்துக்கும், கோட்டீஸ்வரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, வீட்டை காலி செய்யும்படி, கண்ணகி ஆறுமுகத்துக்கு, கோட்டீஸ்வரன் நெருக்கடி கொடுத்துள்ளார். இதுகுறித்து கண்ணகி ஆறுமுகம் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு மே மாதம், கண்ணகி ஆறுமுகத்தின் உறவினர்கள் சிலம்பரசன், ராஜ் உள்ளிட்ட மூன்று பேர், வீட்டின் முன் படுத்திருந்த கோட்டீஸ்வரனின் தலையில் சிமெண்ட் கல்லால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த கோட்டீஸ்வரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக, சூளைமேடு போலீசார் பதிவு செய்த வழக்கை விசாரித்த சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தமிழரசி, கொலையான கோட்டீஸ்வரனை, கடந்த 2012ல் குற்றவாளிகள் மூவரும் ஏற்கனவே தாக்கியுள்ளனர்.

முன் பகை காரணமாக, மூவரும் சேர்ந்து வீட்டின் உரிமையாளரை கொலை செய்தது நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி, மூவருக்கு ஆயுள் தண்டனையும், தலா 25,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam