Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 21 பிப்ரவரி (ஹி.ச.)
டெல்லியில் செங்கோட்டை அருகே பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சாந்தினி சௌக் பகுதியில் உள்ள ஒரு கோயிலை பயங்கரவாதிகள் குறிவைக்கலாம் எனவும் உளவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டையை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் சாந்தினி சௌக்கின் சில பகுதிகள் உட்பட முக்கிய கோயில்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா (LeT) கண்காணிப்பில் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
சாந்தினி சௌக்கில் உள்ள ஒரு கோயிலை இலக்காகக் கொண்டு, அந்த பயங்கரவாத அமைப்பு வெடிகுண்டு தாக்குதலை திட்டமிட்டுள்ளதாகவும்
உளவுத்துறை எச்சரித்துள்ளது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மசூதியில் பிப்ரவரி 6-ம் தேதி நடந்த குண்டுவெடிப்புக்குப் பழிவாங்க லஷ்கர்-இ-தொய்பா முயற்சிப்பதாகவும், இந்தியாவில் ஒரு பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்தியா முழுவதும் உள்ள முக்கிய கோயில்கள் லஷ்கர்-இ-தொய்பாவின் கண்காணிப்பில் உள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / GOKILA arumugam