Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 21 பிப்ரவரி (ஹி.ச.)
கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட திமுக சார்பில் பேச்சுவார்த்தை குழு அமைத்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக நாளை முதல் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக சார்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது
திமுக சார்பில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுவிற்கு திமுக பொருளாளர் நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு, அமைச்சர்கள் எம்.ஆர்
கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
விரைவில் இந்த குழுவினர் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு கொடுத்து ஆலோசிக்க உள்ள உதவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ