கைது செய்யப்பட மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமநாதபுர மீனவர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டம்
ராமநாதபுரம், 21 பிப்ரவரி (ஹி.ச.) தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் கடந்த
கைது செய்யப்பட மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமநாதபுர மீனவர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டம்


ராமநாதபுரம், 21 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் கடந்த 18ஆம் தேதி (18.02.2026) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து இலங்கை காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட அனைத்து மீனவர்களும் தாயகம் திரும்புவதற்கும், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கும் உடனடி தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு நேற்று முன்தினம் (19.02.2026) கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் இலங்கை அரசையும், கடற்படையையும் கண்டித்து இன்று (21.02.2026) ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 22 மீனவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு நாள் வேலை நிறுத்தம் காரணமாக 800க்கும் மேற்பட்ட படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக சுமார் 6 முதல் 7 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்படும் என மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b