கர்நாடகாவில் டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - நான்கு பேர் பலி!
பாகல்கோட், 21 பிப்ரவரி (ஹி.ச.) கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் ஜம்கண்டி தாலுகாவில் உள்ள கட்டே கெரே அருகே இன்று அதிகாலை 2 மணியளவில் டிராக்டர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்,அதில் பயணித்த இரண்டு வயது குழந்தை உட்பட நான்கு
இன்று அதிகாலை மத்தியப்பிரதேச பிந்த் மாவட்டத்தில்  பேருந்து வேன் மீது மோதியதில் நான்கு பேர் பலி, ஏழு பேர் காயம்


பாகல்கோட், 21 பிப்ரவரி (ஹி.ச.)

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் ஜம்கண்டி தாலுகாவில் உள்ள கட்டே கெரே அருகே இன்று அதிகாலை 2 மணியளவில் டிராக்டர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில்,அதில் பயணித்த இரண்டு வயது குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து, தகவல் அறிந்த ஜம்கண்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஆய்வு செய்து, உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து காவல்துறை தெரிவித்ததாவது,

பாகல்கோட் மாவட்டம் ஜம்கண்டி தாலுகாவில் உள்ள கட்டே கெரே அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இறந்தவர்கள் மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டம் பூசா தாலுகாவில் உள்ள குப்வாடியைச் சேர்ந்த மணீஷ் பாண்டே (23), இரண்டு வயது ஹலகி பாண்டே, லட்சுமி சிர்மதி (27) மற்றும் ரேகா பூகே ஆகியோர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM