வருகிற 25-ம் தேதி 165 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை துணை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை, 21 பிப்ரவரி (ஹி.ச) சென்னை சைதாப்பேட்டை சாஸ்திரி நகர் பிரதான சாலையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் மூலதன நிதி ரூபாய் 33.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சி கூடத்தினை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்து பார்வையிட்
Masu


சென்னை, 21 பிப்ரவரி (ஹி.ச)

சென்னை சைதாப்பேட்டை சாஸ்திரி நகர் பிரதான சாலையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் மூலதன நிதி ரூபாய் 33.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சி கூடத்தினை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்து பார்வையிட்டு உடற்பயிற்சி செய்தார்.

இதன்பிறகு அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்த போது பேசியதாவது,

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சைதாப்பேட்டை பகுதியில் 33 லட்சத்தில் 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய உடற்பயிற்சி கூடம் 1150 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது.

வருகின்ற 25ஆம் தேதி சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட (கோஷா) கஸ்தூரிபாய் செய் மருத்துவமனை வளாகத்தில் 32 கோடி 35 லட்சம் மதிப்பீட்டில் திறக்கப்பட உள்ள புதிய கட்டிடத்தை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைக்கிறார், அதனைத் தொடர்ந்து 54 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கான ரத்த புற்றுநோய் உயர் சிகிச்சை மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தின் முதலமைச்சர் திறந்து வைக்கிறார்,

சிகிச்சைக்காக வருகின்ற பெற்றோர்கள் வெளியே தங்குவதற்கான இடத்தை மாரத்தான் நடத்திய அதன் மூலம் கிடைத்த 1.25 கோடி ரூபாய் அத்துடன் சென்னை மாநகராட்சி உடன் இணைந்து 5 கோடி மதிப்பில் பெற்றோர்கள் தங்குவதற்கு இடம் கட்டப்பட்டுள்ளது, குழந்தைகளை சிகிச்சைக்காக கொண்டு வரவும் பெற்றோர்கள் தங்கம் அளவிற்கு 100 படுக்கையில் கொண்டு வசதியுடன், மூன்று வேளை உணவு அளிக்கவும் ஏற்பட செய்யப்பட்டுள்ளது,

சைதாப்பேட்டை அருகில் நான்கு கோடி 39 லட்சம் ரூபாய் மதிப்பில் சமூக நலக்கூடம் கட்டத் தொடங்கி இப்பொழுது முடிவு அடைந்துள்ளது அதையும் முதலமைச்சர் துவங்கி வைக்க உள்ளார்,

மேலும் பெரும்பாக்கம் பகுதியில் 66 கோடி 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட மருத்துவமனையையும், கண்ணகி நகரில் கபடி மைதானம் என ஒட்டுமொத்தமாக 165 கோடி திட்ட பணிகளை முதலமைச்சர் 25ஆம் தேதி துவங்கி வைக்க உள்ளார்..

கிண்டியில் அமைக்கப்பட உள்ள குழந்தைகள் மருத்துவமனையை 18 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது அதற்கான பணியை துவங்கப்பட்டுள்ளது அங்கிருந்து 160 மரங்கள் அகற்றப்பட்டுள்ளது அதற்கு பதிலாக 1500 மரங்கள் மாற்றாக நடப்பட்டுள்ளது.

திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் ஓபிஎஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் கூறியது குறித்தான கேள்விக்கு,

தமிழ்நாட்டின் உள்ள அனைத்து தரப்பு மக்களின் எண்ணம் அவருக்கும் ஏற்பட்டு இருக்கிறது. அதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் அவர்களும் திமுக ஆட்சி மீண்டும் அமையும் என அதே கருத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் நிகழ்வில் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / P YUVARAJ