Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளை நியமிக்க ஒரு பணிக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வீதம் மொத்தம் ரூ.888 கோடி அளவுக்கு லஞ்சம் பெறப்பட்டதாக சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யும் படி தமிழக காவல்துறையின் லஞ்ச தடுப்பு பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம்
ஆணையிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இது குறித்து அதிமுக தனது எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,
அம்பலமான தந்தை - மகன் கமிஷன் கூட்டணி
அமைச்சர் நேரு மீதான அமலாக்கத்துறை அனுப்பிய ஊழல் விவரங்கள் குறித்து வழக்கு பதியக் கோரி அதிமுக தொடர்ந்த வழக்கில், வழக்கு பதிய சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில்,
03.12.2025 அன்று தமிழக பொறுப்பு டிஜிபி-க்கு அனுப்பிய ஆவணத் தொகுப்பில் (Dossier), பக்கம் 51-ல், டெண்டர்களுக்கான 7.5% முதல் 10% வரையிலான கமிஷன், Party Fund (கட்சி நிதி) என்ற பெயரில் வசூலிக்கப்பட்டுள்ளது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
தனது அமைச்சரைக் காப்பாற்ற தான் வழக்கு பதியாமல் ஸ்டாலின் அரசு இருந்தது என்று நினைத்தால்,
தன்னையும், தன் மகனையும் காப்பாற்ற தான் இத்தனை நாட்கள் வழக்கு பதியாமல் இருந்திருக்கிறார்கள்!
தியாகி பாலாஜிக்காக வந்த தொட்டுப் பார், சீண்டிப் பார் வீடியோ, நேருவுக்கு வராமல் போனதற்கு காரணம் இது தானா?
செந்தில் பாலாஜி வழக்கில் சுத்தி சுத்தி தான் குடும்பம் மாட்டும் என்றால், நேரு வழக்கில் தொட்டாலே முதலில் மாட்டுவது ஸ்டாலினும், அவர் மகனும் தான் போலயே ?!
நகராட்சி நிர்வாகம் எனும் ஒரு துறையில் ரூ. 1020 கோடி மதிப்பில் ஊழல் என்றால், இன்னும் எத்தனை துறைகள், எத்தனை ஊழல்கள், இதில் எவ்வளவு பங்கு இந்த தந்தை, மகன் கூட்டணிக்கு என கணக்கிட்டால், தமிழ்நாட்டுக்கு ஓராண்டு பட்ஜெட்டே போட்டுவிடலாம்!
இன்னும் இரண்டே மாதங்கள் தான்...
அதிமுக ஆட்சி அமைந்ததும், எல்லா Files-ம் திறக்கப்படும்! முகத்திரைகள் கிழிக்கப்படும்! இது உறுதி!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b