இன்று முதல் உதகை மலை ரயில் பயணக் கட்டணங்கள் உயர்வு
சென்னை, 21 பிப்ரவரி (ஹி.ச.) உதகை, மலைகளின் அரசி என்று புகழப்படும் முக்கியமான சுற்றுலா ஸ்தலம் ஆகும். ஒவ்வொரு வருடமும் எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் உதகையின் அழகை ரசிக்க வருகின்றனர். குறிப்பாக ஏப்ரல்-ஜூன் மாத கோடை காலங்களில் தினமும் ஆயிரக்கணக்கானோர்
இன்று முதல் உதகை மலை ரயில் பயணக் கட்டணங்கள் உயர்வு


சென்னை, 21 பிப்ரவரி (ஹி.ச.)

உதகை, மலைகளின் அரசி என்று புகழப்படும் முக்கியமான சுற்றுலா ஸ்தலம் ஆகும். ஒவ்வொரு வருடமும் எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் உதகையின் அழகை ரசிக்க வருகின்றனர். குறிப்பாக ஏப்ரல்-ஜூன் மாத கோடை காலங்களில் தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர்.

உதகை தாவரவியல் பூங்கா, உதகை ஏரி, தொட்டபெட்டா சிகரம், ரோஜா பூங்கா போன்ற இடங்கள் முக்கியமான கவர்ச்சி இடங்களாக உள்ளன. இந்த இடங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் உதகை-மேட்டுப்பாளையம் மலை ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கிறார்கள்.

இந்நிலையில் தென்னக ரயில்வே துறையின் அறிக்கையின்படி, உதகை மலை ரயில் பயணக் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு செலவுகள், பெட்ரோல் விலை உயர்வு மற்றும் சேவை மேம்பாட்டு வேலைகள் காரணமாக இந்த மாறுதல் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

புதிய கட்டண உயர்வின்படி, முதல் வகுப்பு சாதாரண கட்டணம் ரூ.520-லிருந்து ரூ.550 ஆகவும், ரிசர்வ் செய்யப்பட்ட முதல் வகுப்பு கட்டணம் ரூ.600-லிருந்து ரூ.630 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே டிக்கெட் புக் செய்தவர்களுக்கு அதிகப்படியான பணம் எடுக்கப்படாது என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இருந்தாலும், இந்த விலை உயர்வு சுற்றுலாப் பயணிகளிடையே ஓரளவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்துடன் பயணம் செய்பவர்கள், குறிப்பாக நடுத்தர வகுப்பினர், மலை ரயில் அனுபவம் இப்போது கொஞ்சம் அதிகமான செலவுள்ளதாக மாறிவிட்டது என்று கூறுகிறார்கள்.

ஏற்கெனவே உதகை பயணம் தங்குமிடம் செலவு, சாப்பாட்டு செலவு, வட்டாரப் போக்குவரத்து செலவு போன்ற காரணங்களால் அதிகமாக இருக்கிற நிலையில், ரயில் கட்டண உயர்வும் இன்னும் அதிக சுமையாக பார்க்கப்படுகிறது.

அதே சமயத்தில், பாதுகாப்பு மற்றும் சேவை தரம் உயர வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டண உயர்வு அவசியமானது என்று ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM