Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 பிப்ரவரி (ஹி.ச.)
சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் பணி நடந்து வருகின்றது.
இங்கு ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோரே கஞ்சு (23) என்பவர் கடந்த 11 மாதங்களாக மெட்ரோ ரயில் பணியில் பணியாற்றி வந்தார். நேற்று வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் 185 வது பில்லரில் பணியாற்றி வந்தார். 50 அடி உயரத்தில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது தவறி கீழே விழுந்ததார்.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் போரூர் எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கு
அழைத்து சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ