ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி தாக்கல் செய்த மானநஷ்ட வழக்கு - நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆஜர்
மும்பை, 21 பிப்ரவரி (ஹி.ச.) ரேபரேலி பாராளுமன்ற உறுப்பினரான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2014ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, மகாத்மா காந்தியைக் கொன்றதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் காரணம் என்று குறிப்பிட்டார். இந்த பேச்
ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி தாக்கல் செய்த மானநஷ்ட வழக்கு - நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆஜர்


மும்பை, 21 பிப்ரவரி (ஹி.ச.)

ரேபரேலி பாராளுமன்ற உறுப்பினரான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2014ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, மகாத்மா காந்தியைக் கொன்றதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் காரணம் என்று குறிப்பிட்டார்.

இந்த பேச்சு சம்பந்தமாக ராகுல் காந்தி மீது மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திலுள்ள பய்வாண்டி நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ராஜேஷ் என்பவர் மானநஷ்ட வழக்கு பதிவு செய்தார்.

இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஜாமீன் பொறுப்பாளராக ஒப்புக்கொண்டதால் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதற்கிடையில், சிவராஜ் பாட்டீல் சென்ற வருடம் டிசம்பர் மாதம் இறந்துவிட்டார். அதன் பிறகு, புதிய ஜாமீன் பொறுப்பாளரை ராகுல் காந்தி அறிமுகப்படுத்த வேண்டும். மேலும், வழக்கில் ராகுல் காந்தி நேரடியாக ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் கடந்த மாதம் 17ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், ராகுல் காந்திக்கு எதிரான மானநஷ்ட வழக்கு நீதிமன்றத்தில் இன்று மறுபடியும் விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது, விசாரணைக்காக ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

மேலும், இந்த வழக்கில் தன்னுடைய புதிய ஜாமீன் பொறுப்பாளராக மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கலை நீதிமன்றத்தில் ராகுல் காந்தி அறிமுகம் செய்தார்.

அதன் பிறகு, ஹர்ஷ்வர்தனை புதிய ஜாமீன் பொறுப்பாளராக ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கைத் தொடர்ந்து விசாரித்து வருகிறது.

Hindusthan Samachar / vidya.b