பிரதமர் மோடி மீண்டும் சரண் அடைவார் - ராகுல் காந்தி விமர்சனம்!
புதுடெல்லி, 21 பிப்ரவரி (ஹி.ச.) அதிக வரிவிதிப்பு காரணமாக அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல்வேறு நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகள
ராகுல் காந்தி


புதுடெல்லி, 21 பிப்ரவரி (ஹி.ச.)

அதிக வரிவிதிப்பு காரணமாக அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல்வேறு நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறுகையில்,

பிரதமர் சமரசம் செய்து கொண்டார். அவரது துரோகம் இப்போது அம்பலமாகியுள்ளது.

அவரால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அவர் மீண்டும் சரணடைவார் என்றார்.

முன்னதாக காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ் பிரதமர் மோடியின் முடிவை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / GOKILA arumugam