ராபர்ட் வதேரா தொடர்பான நில பேர வழக்கு - இன்று டெல்லி நீதிமன்றம் விசாரணை
புதுடெல்லி, 21 பிப்ரவரி (ஹி.ச.) குருகிராமின் ஷிகோப்பூர் கிராமத்தில் 2008 ஆம் வருடம் நடைபெற்ற நில பேர முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் தொழிலதிபர் ராபர்ட் வதேரா உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் சமர்ப்பித்த குற்றச்சாட்டை விசாரணைக்கு எடுத்
இன்று டெல்லி நீதிமன்றம் விசாரிக்க உள்ள ராபர்ட் வதேரா தொடர்பான நில பேர  வழக்கு


புதுடெல்லி, 21 பிப்ரவரி (ஹி.ச.)

குருகிராமின் ஷிகோப்பூர் கிராமத்தில் 2008 ஆம் வருடம் நடைபெற்ற நில பேர முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் தொழிலதிபர் ராபர்ட் வதேரா உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் சமர்ப்பித்த குற்றச்சாட்டை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது சம்பந்தமான விவகாரத்தை டெல்லி நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் ஷரத்துகளின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட அமலாக்க இயக்குநரக குற்றப்பத்திரிக்கையை ஆய்வு செய்யும் ரூஸ் அவென்யூ நீதிமன்றங்களின் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தியின் கணவரும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனுமான வதேரா, ஹரியானாவில் 3.53 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை முறைகேடாக நில பரிமாற்றம் செய்து அதன் மூலம் குற்ற வருவாயை அடைந்ததாக அமலாக்க இயக்குநரகம் குற்றம் சுமத்தியுள்ளது.

வதேராவின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் வாயிலாக குற்ற வருவாய் திருப்பி அனுப்பப்பட்டதாக மத்திய பணமோசடி தடுப்பு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கு முன்னதாக, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டப்பிரிவு 223(1)-ன் கீழ் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு விசாரணை செய்வதற்கு ஒரு வாய்ப்பு அளிக்காமல் எந்த ஒரு நீதிமன்றமும் புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு, வதேரா மற்றும் இதர குற்றவாளிகளுக்கு டெல்லி நீதிமன்றம் அறிவிப்பு அனுப்பியிருந்தது.

Hindusthan Samachar / JANAKI RAM