Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 பிப்ரவரி (ஹி.ச.)
எஸ்.எஸ்.பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக அருமந்தை டாக்டர் ரதிதேவி,காஞ்சி அரிமா செல்வகுமார்,டாக்டர் எஸ்.பி.பகவதி பாலா ஆகியோர்கள் தயாரித்து பகவதி பாலா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்
சிவ சம்போ
இத்திரைப்படத்தில்
சி.பி. தில் நட்ராஜ், ஷிவானி,தனுஜா செந்தில்,இமான் அண்ணாச்சி, சீதை,
ரதி தேவி,
வைகாசி ரவி,வையாபுரி, திருச்சி சாதனா, இளவாசு,சாரப்பாம்பு,
சுப்புராஜ்,பகவதி பாலா உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நாயகன் தில் நட்ராஜ் (அர்ஜுன்) காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
தனது பணியை சாதகமாக பயன்படுத்தி இரண்டு கொலைகளை செய்கிறார்.
இந்த கொலையானது அர்ஜுனன் உடன் பணி புரியும் சக நண்பர்கள் இரண்டு பேருக்கு தெரிய வர அந்தக் கொலைகளுக்கான காரணத்தை கேட்கின்றனர்.
ஆரம்பத்தில் இந்த கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுத்த அர்ஜுனன் பிறகு நான் தான் அந்த கொலைகளை செய்தேன்.
மேலும் சில கொலைகள் நான் செய்ய இருக்கிறேன்.
நான் ஒரு திருமண மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளேன்.
அதற்கு காரணமானவர்களை பழி வாங்குகிறேன் இன்னும் ஒரு சில பேரை பழிவாங்குவேன் என்கிறார்.
இன்னொரு பக்கம் திருமண மோசடியில் கைதாகி சிறையில் இருந்தவர்கள் வெளியே வருகின்றனர்.
அவர்கள் சிறைக்கு செல்வதற்கு காரணமாக இருந்த அர்ஜுன் காதலி ஹிவானியை கொலை செய்ய முயற்சிக்கின்றனர்.
தனது காதலியை கொலை செய்ய வரும் நபரிடமிருந்து தனது காதலியை காப்பாற்றினாரா?
கொலை செய்ய வரும் குற்றவாளியை ஷிவானி எதற்காக சிறைக்கு
அனுப்பினார்?
அர்ஜுன் தனது காதலி ஷிவானியை கரம் பிடித்தாரா? இதுதான் படத்தின் மீது கதை.
இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் நாயகன் தில் நட்ராஜ் காதல்,கோபம் பழிவாங்கும் வெறி என கதைக்கு தேவையான அனைத்து நடிப்பையும் திரையில் காட்ட நன்கு முயற்சித்துள்ளார்.
நாயகி ஷிவானியின் காதல் காட்சிகள் சிறப்பாக உள்ளது.
கிளைமாக்ஸ் காட்சியில் வில்லன்,வில்லிகளை குத்திக் கொலை செய்யும் காட்சிகளை ஆக்ரோஷமாக நடிக்க முயற்சித்துள்ளார் ஷிவானி.
இமான் அண்ணாச்சி தனக்கு கொடுத்த
கதாபாத்திரத்திற்கேற்றவாறு தனது அனுபவ நடிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார்.
படத்தில் நானும் இருக்கிறேன் என்று இரண்டு காட்சிகளில் வில்லனுக்கு உதவியாளராக திரையில் தோன்றுகிறார் செந்தில்.
திருச்சி சாதனா அவரது பாணியில் இமான் அண்ணாச்சியுடன் இணைந்து பைப்பில் தண்ணி அடித்து தண்ணி வந்தவுடன் சென்றுவிட்டார்.
தனது காம இச்சைக்காக திருமணம் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றி வரும் ஒரு கூட்டத்திடம் இருந்து பெண்கள் எவ்வாறு விழிப்போடு இருக்க வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு திரைப்படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் பகவதி பாலா.
ஏசி ஜான் பீட்டர் இசையில் பாடல்கள் கேட்கும் படியாக உள்ளது.
மொத்தத்தில்
சிவ சம்போ பெண்களுக்கான சமூக விழிப்புணர்வு திரைப்படம்!
Hindusthan Samachar / Durai.J