Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 21 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழகத்திலுள்ள மலர் சந்தைகளிலேயே மிகவும் பிரபலமானது தோவாளை மலர் சந்தையாகும். தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து தோவாளை மலர் சந்தைக்கு கொண்டுவரப்படும் பூக்கள்தான், தமிழகம் மட்டுமல்லாமல், கேரள மாநிலத்துக்கும் டன் கணக்கில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
தோவாளை மலர் சந்தைக்கு பெங்களூர், ஓசூர், மதுரை, திண்டுக்கல், நெல்லை போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு டன் கணக்கில் கொண்டுவரப்படும்.
அதேபோல குமாரபுரம், தோப்பூர், ஆரல்வாய்மொழி, செண்பகராமன் புதூர் போன்ற உள்ளூர் பகுதிகளிலிருந்தும் பூக்கள் விற்பனைக்காக தோவாளை மலர் சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது.
பொதுவாக முகூர்த்தம் மற்றும் விஷேச தினங்களில் பூக்களின் விலை வழக்கமாக அதிகரித்து காணப்படும். ஆனால் தற்போது தோவாளை சந்தையில் மல்லிகை, பிச்சி உள்ளிட்ட பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
நேற்று ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ. 1,600க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.650க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.900க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.600க்கு விற்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b