திருத்தணியில் நான்கு வாலிபர்கள் சேர்ந்து ஒருவரை சரமாரியாக அடித்து ரத்த காயங்களுடன் சட்டையை பிடித்து இழுத்துச் செல்லும் அதிர்ச்சி
திருவள்ளூர், 21 பிப்ரவரி (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பைபாஸ் சாலையில் குடியிருப்பு மற்றும் அதிகளவில் கார் இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் பழுது பார்க்கும் கடைகள் அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில் நான்கு பேர் கொண்ட வாலிபர்கள் கையி
தாக்குதல்


திருவள்ளூர், 21 பிப்ரவரி (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பைபாஸ் சாலையில் குடியிருப்பு மற்றும் அதிகளவில் கார் இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் பழுது பார்க்கும் கடைகள்

அதிக அளவில் உள்ளது.

இந்த நிலையில் நான்கு பேர் கொண்ட வாலிபர்கள் கையில் கட்டை

பிளாஸ்டிக் பைப்பை வைத்துக்கொண்டு அங்கு நின்று கொண்டிருந்த வாலிபரை அவர்கள்

சரமாரியாக அடித்து ரத்த காயங்களுடன் சட்டையை பிடித்து இழுத்துச் செல்லும்

சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்துள்ளது.

இது தொடர்பாக போலீசார்

வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை நான்கு பேர் கொண்ட கும்பல் எங்கே அழைத்துச் சென்றார்கள் என்று தனிப்படை போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரவில் மக்கள் அதிகமாக நடமாடக்கூடிய இடத்தில் நான்கு பேர் கொண்ட வாலிபர்கள் ஒருவரை சராசரியாக இரத்த காயங்களுடன் அடித்து இழுத்துச் சென்ற சம்பவம்

பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இரவு மற்றும் பகல்

நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம்

சாட்டுகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam