திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து
திருச்சி, 21 பிப்ரவரி (ஹி.ச.) திருச்சியிலிருந்து சேலம் நோக்கி தேங்காய் மட்டைகளை ஏற்றிக்கொண்டு இன்று நள்ளிரவு லாரி ஒன்று புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்தது. திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் ரவுண்டானாவில் லாரி சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின்
சாலை விபத்து


திருச்சி, 21 பிப்ரவரி (ஹி.ச.)

திருச்சியிலிருந்து சேலம் நோக்கி தேங்காய் மட்டைகளை ஏற்றிக்கொண்டு இன்று நள்ளிரவு லாரி ஒன்று புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்தது.

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் ரவுண்டானாவில் லாரி சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தலைப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து கிரேன் எந்திரத்தின் மூலம் போலீசார் விபத்துக்குள்ளான லாரியை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி அகற்றினர்.

மேலும் இந்த விபத்துக்கு குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam