தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி வகுப்பு துவக்கம்
வேலூர், 21 பிப்ரவரி (ஹி.ச.) வரும் 23-ம் தேதி வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொள்ளும் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற இருக்கிறது. இதில் சுமார் 4900 பேர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் கூட்டத்திற்கு வர
தவெக


வேலூர், 21 பிப்ரவரி (ஹி.ச.)

வரும் 23-ம் தேதி வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொள்ளும் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற இருக்கிறது.

இதில் சுமார் 4900 பேர் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் கூட்டத்திற்கு வருகை தரும் நிர்வாகிகளை ஒழுங்குபடுத்தவும்,

வருபவர்களுக்கு, தண்ணீர் கொடுப்பது, உணவு கொடுப்பது, மருத்துவ வசதிக்கு உதவதற்கு தன்னார்வலர்கள் வேண்டும் என தவெக சார்பாக கேட்கப்பட்டது.

இந்த நிலையில் அணைக்கட்டு, குடியாத்தம், வேலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு

உட்பட்ட தன்னார்வலர்களுக்கு அகரம்சேரியிலேயே நேர்காணல் மற்றும் பயிற்சி வகுப்பு நடத்த உள்ளது.

தற்போது இந்த பயிற்சி வகுப்பில் பங்கு பெற 300 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் என தன்னார்வலர்கள் அகரம்சேரிக்கு வருகை

தந்து தங்கள் பெயரை பதிவு செய்து வருகின்றனர்.

1000 பேர் வரை தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

என தமிழக வெற்றி கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தன்னார்வலர்களுக்கு தவெகவில் உள்ள முன்னாள் DSP சபியுல்லா பயிற்சி அளிக்கிறார்.

Hindusthan Samachar / GOKILA arumugam