Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 22 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றியும், நிர்வாக வசதிக்காகவும் திருநெல்வேலி சரகத்தில் ஒரே நாளில் 23 காவல் ஆய்வாளர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்து, தென்மண்டல காவல் ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி மற்றும் நெல்லை சரக டி.ஐ.ஜி. சரவணன் ஆகியோர் இதற்கான அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளனர்.
இந்த உத்தரவின்படி, விக்கிரமசிங்கபுரம் ஆய்வாளர் ஆதம் அலி தூத்துக்குடி மாவட்டம் ஏரலுக்கும், கல்லிடைக்குறிச்சி ஆய்வாளர் கலா புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். தென்காசி குற்றப்பிரிவு ஆய்வாளர் உமா உவரிக்கும், ஏரல் ஆய்வாளர் சபாபதி சங்கரன்கோவில் டவுனுக்கும், சுரண்டை ஆய்வாளர் ஹரிஹரன் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டிற்கும் மாற்றப்பட்டனர்.
நெல்லை மாவட்ட மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஜானகி தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவிற்கும், குளத்தூர் ஆய்வாளர் ரேன்னிஸ் தென்காசி மாவட்டம் அச்சன்புதூருக்கும், குரும்பூர் ஆய்வாளர் தங்கராஜ் தென்காசி மாவட்டம் குருவிகுளத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்டீபன் ராஜாக்கமங்கலத்திற்கும், ஊத்துமலை ஆய்வாளர் காளிராஜன் கன்னியாகுமரி மாவட்டம் கொட்டிக்கோட்டிற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சங்கரன்கோவில் டவுன் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் சாத்தான்குளத்திற்கும், பசுவந்தனை ஆய்வாளர் சேகர் மண்டைக்காட்டிற்கும், தூத்துக்குடி குற்றப்பிரிவு ஆய்வாளர் லட்சுமி பிரபா குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், ஏர்வாடி ஆய்வாளர் செல்வி தெற்கு தாமரைகுளத்திற்கும் மாற்றப்பட்டனர். திருச்செந்தூர் தாலுகா ஆய்வாளர் இன்னோஸ்குமார் சுசீந்திரத்திற்கும், ராஜாக்கமங்கலம் ஆய்வாளர் பத்மாவதி நெல்லை மாவட்ட மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
குருவிகுளம் ஆய்வாளர் கமலா தேவி அருமனைக்கும், தென்காசி மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் ஜெயலட்சுமி பழகுலுக்கத்திற்கும், சுசீந்திரம் ஆய்வாளர் முத்துக்குமரன் ஏர்வாடிக்கும், அருமனை ஆய்வாளர் பாஸ்கரன் விக்கிரமசிங்கபுரத்திற்கும் மாற்றப்பட்டனர். மண்டைக்காடு ஆய்வாளர் லட்சுமிபிரபா கல்லிடைக்குறிச்சிக்கும், குளச்சல் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தனலட்சுமி குளத்தூருக்கும், கன்னியாகுமரி என்.எஸ்.டி. ஆய்வாளர் சாம்சன் சுரண்டைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றம் காவல்துறை வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b