தெலுங்கானா பாரதிய ஜனதா கட்சியின் தலைவர், வீட்டுக்காவலில் வைப்பு
ஐதராபாத், 22 பிப்ரவரி (ஹி.ச.) தெலுங்கானாவின் காமாரெட்டி நகரத்தில் கடந்த இரண்டு தினங்களாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரசு கட்சி ஆதரவாளர்களுக்கிடையே பூசல்கள் உண்டாயின. இது வன்முறையாக உருவெடுத்தது. ஒருவரையொருவர் கற்களைக் கொண்டு எறிந்து தாக்கிக்
தெலுங்கானா பாரதிய ஜனதா கட்சியின் தலைவர், வீட்டுக்காவலில் வைப்பு


ஐதராபாத், 22 பிப்ரவரி (ஹி.ச.)

தெலுங்கானாவின் காமாரெட்டி நகரத்தில் கடந்த இரண்டு தினங்களாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரசு கட்சி ஆதரவாளர்களுக்கிடையே பூசல்கள் உண்டாயின.

இது வன்முறையாக உருவெடுத்தது. ஒருவரையொருவர் கற்களைக் கொண்டு எறிந்து தாக்கிக் கொண்டனர்.

இப்போராட்டத்தின் விளைவாக, காங்கிரஸ் தலைவரின் வாகனம் ஒன்று நேற்று தரைமட்டமாக்கப்பட்டது. கல் எறிகளினால் சில கட்சி உறுப்பினர்கள் காயமுற்றனர்.

இதனைத் தொடர்ந்து, நடந்த நிகழ்விற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கதிபள்ளி வெங்கட ரமணா ரெட்டியின் தலைமை அலுவலகத்தின் மீது காங்கிரசு கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் செய்து சேதப்படுத்தினர்.

பன்ஸ்வாடா பகுதியில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் கற்களால் தாக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவங்களில் காயம் அடைந்த கட்சி உறுப்பினர்களை இன்று நேரடியாகச் சந்தித்து ஆறுதல் சொல்ல தெலுங்கானா பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் என். ராமச்சந்திர ராவ் தீர்மானித்திருந்தார்.

இதன்பொருட்டு காமாரெட்டி நகரத்திற்குப் பயணிக்கவிருந்தார்.

இதன் காரணமாக, பதற்றம் அதிகமாகலாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு காவல்துறையினர் அவரை வீட்டுக்காவலில் வைத்தனர்.

Hindusthan Samachar / JANAKI RAM