குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று சிவகங்கை வருகை
சிவகங்கை, 22 பிப்ரவரி (ஹி.ச.) குடியரசு துணைத் தலைவார் சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்பு விமானம் மூலம் இன்று காலை 10.30 மணிக்கு மதுரை விமான நிலையத்துக்கு வருகை தருகின்றார். அவர் அங்கிருந்து கார் மூலம் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உ
C.P. Radhakrishnan to visit Sivaganga


சிவகங்கை, 22 பிப்ரவரி (ஹி.ச.)

குடியரசு துணைத் தலைவார் சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்பு விமானம் மூலம் இன்று காலை 10.30 மணிக்கு மதுரை விமான நிலையத்துக்கு வருகை தருகின்றார்.

அவர் அங்கிருந்து கார் மூலம் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். இதையடுத்து, பிற்பகல் 1 மணிக்கு சிவகங்கை ராணி வேலு நாச்சியார் அரண்மனைக்கு செல்கிறார்.

பிறகு, ஏ.சி.எஸ். அறக்கட்டளை சாா்பில் மதுரை வண்டியூர் அம்மா திடலில் மாலை 4 மணிக்கு நடைபெறும் விழாவில் பங்கேற்று, 140 அடி உயரத்தில் அமைக்கப்படவுள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மாலை 5.50 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் புதுடெல்லிக்குச் செல்கிறார்.

Hindusthan Samachar / vidya.b