மாற்று கட்சியினர் வருகையால் சட்டமன்ற தேர்தலில் தொகுதிகள் குறைத்து 165+ இடங்களில் போட்டியிடும் திமுக
சென்னை, 22 பிப்ரவரி (ஹி.ச.) தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்து கொடுப்பதற்கான அதிகாரபூர்வ பேச்சுவார்த்தையை திமுக இன்று தொடங்கியுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தற்போதைய அர
Admk head office


Cm


சென்னை, 22 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்து கொடுப்பதற்கான அதிகாரபூர்வ பேச்சுவார்த்தையை திமுக இன்று தொடங்கியுள்ளது.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தற்போதைய அரசியல் களநிலவரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளது.

அதன்படி இன்று காலை முதலமைச்சர், திமுக தலைவர், மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து திமுக பேச்சுவார்த்தை குழு ஆலோசனை நடத்தியது.

இதனை தொடர்ந்து, முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக நடத்தியது.

இதில் 5 தொகுதிகளை கேட்டு பின்னர் குறைந்தபட்சம் 4 தொகுதிகளையாவது ஒதுக்கும் படி ஐ.யு.எம்.எல் கட்சி கேட்டதாகவும் ஆனால், கூட்டணிக்குள் கூடுதலான கட்சிகள் இடம்பெற்றுள்ளதால், திமுக கடந்த முறை போட்டியிட்ட தனது எண்ணிக்கையை குறைத்து கொள்கிறது.

மற்ற கூட்டணி கட்சிகளும் குறைத்து கொள்ள வேண்டும் என திமுக வலியுறுத்தியதாக ஐ.யு.எம்.எல் தலைவர் காதர் மொகதீன் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ