முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளில் புத்தகம் வெளியிடும் எடப்பாடி பழனிசாமி!
சென்னை, 22 பிப்ரவரி (ஹி.ச.) தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளில் அதிமுக சார்பில் தேர
Eps book


சென்னை, 22 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளில் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைக் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட இருக்கிறார்.

அதில் நட்சத்திர வேட்பாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.

பெண் வேட்பாளர் ஒருவரும் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நாளில் தொண்டர்களுக்கு மேலும் ஒரு இன்ப செய்தி வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

அது என்னவென்றால் 'சமூக நீதியை காத்த காவலர் எடப்பாடியார்' என்ற புத்தகம், ஜெயலலிதா பிறந்த நாளில் வெளியாக இருக்கிறது.

இந்த புத்தகத்தின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இந்த புத்தகத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி எழுதியிருக்கிறார்.

கே.டி. ராஜேந்திர பாலாஜி எழுதிய 'சமூக நீதியை காத்த காவலர் எடப்பாடியார்' என்ற புத்தகத்தை தான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

அதன் படி அதிமுக தலைமை அலுவலகத்தில்உள்ள எம்ஜிஆர் மாளிகையில் பிப்ரவரி 24 ஆம் தேதி இந்த புத்தக வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

இந்த புத்தகத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார்.

பிப்ரவரி 24ஆம் தேதி காலை 10 மணி அளவில் எம் ஜி ஆர் மாளிகையில் நடைபெறும் இந்த புத்தக வெளியீட்டு விழாவில், 'சமூக நீதியை காத்த காவலர் எடப்பாடியார்' என்ற புத்தகத்தின் முதல் பிரதியை, கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கவிஞர் முத்துலிங்கம், எஸ் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN