Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 பிப்ரவரி (ஹி.ச.)
சதுரங்க வேட்டை சினிமா பட பாணியில் இரிடியம் கலசம் வாங்கி தருவதாக கூறி, 15 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் மருபெட்டா ரமேஷ், 65. இவருக்கு இரிடியம் கலசம் வாங்கி தருவதாக விட்டல் பாபு என்பவர் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை உண்மை என நினைத்த அவர் பெரியமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள விடுதியில் வைத்து, 5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
பின், 2020 முதல் 2023 வரை பல தவணையாக, 15 லட்சம் ரூபாயை விட்டல் பாபுவிடம் கொடுத்தார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட விட்டல்பாபு இரிடியம் கலசத்தை வாங்கி தராமலும் வாங்கிய பணத்தை திருப்பி தராமலும் அலைக்கழித்து வந்தார். இதுகுறித்து மருபெட்டா ரமேஷ் என்பவர் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான விட்டல் பாபுவை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள விடுதியில் தங்கியிருப்பது போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
விரைந்து சென்ற போலீசார் விட்டல்பாபுவை கைது செய்தனர். சதுரங்க வேட்டை பட பாணியில் மோசடி செய்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ