Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 22 பிப்ரவரி (ஹி.ச.)
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காவப்பட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட
வீடுகள் உள்ள நிலையில் கிராமத்தின் நடுவே சொகுசு பங்களாவில் ஜம்பேரி மீனா
கணவன் மனைவி இருவரும் இணைந்து 24 மணி நேரமும் Gpay Phonepay மூலம் தனது
வீட்டில் மது விற்பனை செய்வதும் மது பிரியர்கள் மது வாங்கி செல்லும் வீடியோ
தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
பாலக்கோட்டை சுற்றி புற்று ஈசல் போல் பெருகிவரும் சந்து கடைகாரர்கள்
டாஸ்மாக் மதுபானக் கடையில் இருந்து ஒட்டுமொத்தமாக மதுபானங்களை வாங்கி வந்து பெட்டி பெட்டியாக பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் கல்லூரி மாணவர்கள், இளம்வயதினர், கூலி வேலைக்கு செல்லும்
தொழிலாளர்கள், வேலைக்கு செல்லாமலும் எந்நேரமும் மதுஅருந்தி மதுபோதைக்கு
அடிமையாகி உள்ளனர்.
இவர்களின் உடல் நலம் பாதிப்படைந்து வருவதோடு மட்டுமல்லாமல், போதிய வருமானம் இன்றி இவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
மாதா மாதம் கீழ் மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை சரியாக மாமூல் கிடைப்பதால்
யாரும் கண்டு கொள்வதில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam