Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 22 பிப்ரவரி (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தேவாலா வாளவயல் பகுதியில் வசித்து வருபவர் அசோக் (35) இவருக்கும் இவர் மனைவிக்கும் சண்டை ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த அசோக்கின் மனைவி உறவினர் வீட்டுக்கு சென்றார் .
மனைவியை தேடி அசோக் மாமியார் மேரி (55) வீட்டிற்குச் சென்று தனது மனைவி எங்கே என மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் மேரி மற்றும் அவரது மகன்கள் சுதாகரன் அஜித் ஆகியோரிடம் அசோக் கடுமையாக சண்டையிட்டார் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது இதில் ஆத்திரமடைந்த அசோக் (35) அறிவாலுடன் வந்து மைத்துனர்களை வெட்ட முயன்ற போது அதை தடுக்கச் சென்ற மேரி மீது அரிவாள் வெட்டு விழுந்தது.
மேலும் மைத்துனர்கள் சுதாகரன் (29) அஜித்(28) ஆகியோரையும் அசோக் சரமாரியாக வெட்டினார். இதில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
வெட்டு காயங்களுடன் மேரி (55) பரிதாபமாக உயிரிழந்தார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அசோக்கை தேவாலா காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
குடும்பத் தகராறில் மாமியாரை வெட்டி கொன்றும் மைத்துனர்களை சராமரியாக வெட்டு கத்தியால் தாக்கிய நபரின் கொலை வெறி தாக்குதல் தேவாலா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
Hindusthan Samachar / ANANDHAN