உலக அரங்கில் நேரு நாகினி ஆட்டம் காட்டினார் ,ஆனால் பிரதமர் மோடியோ செயற்கை நுண்ணறிவை காட்டினார் - நிஷிகாந்த் துபே
புதுடெல்லி, 22 பிப்ரவரி (ஹி.ச.) புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், கடந்த 16ஆம் தேதி ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டிற்கான கண்காட்சி ஆரம்பமானது. பிரதமர் மோடியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த மாநாடு 20ஆம் தேதி வரை தொடர்ந்தது. பிரதமர் மோடியின் அழைப்
உலக அரங்கில் நேரு  நாகினி ஆட்டம் காட்டினார்; ஆனால் பிரதமர் மோடியோ செயற்கை நுண்ணறிவை காட்டினார் - நிஷிகாந்த் துபே


புதுடெல்லி, 22 பிப்ரவரி (ஹி.ச.)

புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், கடந்த 16ஆம் தேதி ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டிற்கான கண்காட்சி ஆரம்பமானது.

பிரதமர் மோடியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த மாநாடு 20ஆம் தேதி வரை தொடர்ந்தது.

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜயீத் அல் நாஹியான், சுலோவேக்கியா நாட்டின் அதிபர் பீட்டர் பெல்லேகிரினி, இலங்கை நாட்டின் அதிபர் அனுர குமார திசநாயகா உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவிற்கு வருகை புரிந்தனர்.

உலகளாவிய தெற்கு பிராந்தியத்தில் நடைபெறக்கூடிய முதல் உச்சி மாநாடு எனும் பெருமையை இது பெறுகிறது.

இந்நிலையில், புது டெல்லியில் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டின்போது, இளைஞர் காங்கிரஸ்காரர்கள் சிலர் மேலாடை இல்லாமல் அரை நிர்வாண கோலத்தில் சென்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இதற்குப் பல்வேறு கட்சிகளும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தன.

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான நிஷிகாந்த் துபே அவர்கள் பேசுகையில்,

காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்தார்.

மேலும், அவர் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவைப் பற்றியும் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேரு அவர்கள் உலகிற்கு நாகினி ஆட்டம் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஆனால், பிரதமர் மோடியோ தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) ஆகியவற்றை உலகிற்கு வெளிப்படுத்தினார் என்று குறிப்பிட்டார்.

இது போன்ற வேறுபாடு இயல்பாகவே அதிருப்தியை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து, 1962ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜான் எப். கென்னடியின் மனைவி ஜாக்குலின் கென்னடி இந்தியாவிற்கு வந்தபோது, அவரை நேரு வரவேற்ற புகைப்படங்களை நிஷிகாந்த் துபே சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM