Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை , 22 பிப்ரவரி (ஹி.ச.)
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் குறைகளை திறம்பட நிவர்த்தி செய்வதன் மூலம் மகளிருக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் மூத்த குடிமக்களின் நலனை உறுதி செய்வதில் உறுதி பூண்டுள்ளது.
பென்சன் வாங்குவோரின் குறைகளைத் தீர்க்க அரசு தரப்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ள பென்சன் அதாலத் இயக்கம் கடந்த 2017ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் தான் தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து நாடு முழுவதும் 12 அமர்வுகள் நடத்தப்பட்டு 25,000க்கும் மேற்பட்ட பென்சன் சார்ந்த வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மதுரை ஆட்சியர் அலுவலக பழைய கட்டடத்தில் நாளை
(பிப்ரவரி 23) காலை 10:00 மணிக்கு ஓய்வூதியர்கள் குறை தீர்ப்பு (பென்ஷன் அதாலத்) கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழக அரசின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், சிறப்பு ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியம் தொடர்பான குறைகளுக்கு தீர்வுகாண சென்னை கணக்காயர் அலுவலகம் மூலம் மதுரை மண்டல அளவில் கூட்டம் நடைபெறவுள்ளது.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் இதில் குறைகளுக்கு தீர்வு காணலாம் என பென்ஷன் அதாலத் திட்ட அதிகாரிகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b