சீமானுக்கு பேச கற்றுத் தந்ததே கலைஞர் தான் - கோவி செழியன்
தஞ்சாவூர், 22 பிப்ரவரி (ஹி.ச.) தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரில் புதிய கல்லூரியில் சமூக நீதி மாணவர் விடுதியை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; இந்த ஆண்டிலே
கோவி செழியன்


தஞ்சாவூர், 22 பிப்ரவரி (ஹி.ச.)

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரில் புதிய கல்லூரியில் சமூக நீதி மாணவர் விடுதியை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்தார்.

தொடர்ந்து

செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;

இந்த ஆண்டிலேயே புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு புதிய மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டது.

கல்லூரிக்கு 18 கோடி மதிப்பில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

நடைபெற்றது. இதே ஆண்டிலேயே சமூக நீதி மாணவர் விடுதி அனுமதி பெற்று

திறக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி துறையில் சாதிக்கப்பட்டுள்ள இவைகள் தவிர மேலும்

திருவிடைமருதூர் தொகுதிக்கு இன்னும் பல சாதனைகள் தொடர்வதற்கு தமிழக முதல்வருக்கு அனைவருக்கும் என்றும் நன்றி பாறாற்றுபவர்களாக இருக்க வேண்டும்.

காய்ந்த மரத்தில் தான் கல்லடி படும் என்பார்கள். கலைஞரிடம் பேச பயிற்சி பெற்ற சீமான் போன்றவர்கள் மேடை மாறி தாக்குதல் நடத்துவது நியாயமா என்பது பொது

மக்களுக்கு தெரியும்.

திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. இரண்டாவது இடத்திற்கு யார் வருவது என்பதற்காகத்தான் திமுகவை அனைவரும் வசைப்பாடிக்

கொண்டிருக்கிறார்கள்.

சீமான் போன்றவர்களின் பேச்சை எல்லாம் பெரிது படுத்த வேண்டியது இல்லை.

இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam