ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் நாளை சனிப் பெயர்ச்சி விழா
தூத்துக்குடி, 22 பிப்ரவரி (ஹி.ச.) நவகையாலயங்களில் சனி ஸ்தலமாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில், சனிப் பெயர்ச்சி விழா நாளை (பிப்ரவரி 23) தொடங்குகிறது. சனி பகவான் வருகிற 6-ஆம் தேதி காலை 7:37 மணிக்குக் கும்ப ராசியிலி
ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் நாளை சனிப் பெயர்ச்சி விழா


தூத்துக்குடி, 22 பிப்ரவரி (ஹி.ச.)

நவகையாலயங்களில் சனி ஸ்தலமாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில், சனிப் பெயர்ச்சி விழா நாளை (பிப்ரவரி 23) தொடங்குகிறது.

சனி பகவான் வருகிற 6-ஆம் தேதி காலை 7:37 மணிக்குக் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதனை முன்னிட்டு நாளை அதிகாலை 4:30 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது.

விழா நாட்களில் தினமும் காலை 7 மணி முதல் மகா நியாச ஜெபம், விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், ருத்ர ஹோமம் மற்றும் தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

விழாவின் முக்கிய நிகழ்வாக 6-ஆம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், காலை 7 மணிக்குச் சனீஸ்வர பகவானுக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.

சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு ஒரு கோடி நாம ஜெப வழிபாடு மற்றும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற உள்ளன.

இதற்கான ஏற்பாடுகளைக் கோவில் செயல் அலுவலர் ரமேஷ், தக்கார் கோவல மணிகண்டன் மற்றும் ஆய்வாளர் நிசாந்தினி ஆகியோர் செய்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b