அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் 7.5% ஒதுக்கீடு கொண்டு வர வலியுறுத்தி ஆசியர்கள் பட்டினிப்போராட்டம்
கன்னியாகுமரி, 22 பிப்ரவரி (ஹி.ச.) தமிழகம் முழுவதும் இன்று அரசு உதவிபெறும் பள்ளிகளிலும்,அரசின் 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் என ஆசிரியர்கள் மாநிலம் தழுவிய பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் படி குமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில
போராட்டம்


கன்னியாகுமரி, 22 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழகம் முழுவதும் இன்று அரசு உதவிபெறும் பள்ளிகளிலும்,அரசின் 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் என ஆசிரியர்கள் மாநிலம் தழுவிய பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் படி குமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில்அண்ணாவிளையாட்டு திடல் முன் ஆசிரியர்கள் போராட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு ஆணைப்படி, அரசு பள்ளி மாணவர்களும், சுயநிதி பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களும் பயன்பெறும் விதத்தில் 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்ட அரசாணையில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் சேர்க்கப்படாமல் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் பயிலும் மாணவர்களும் இந்த வாய்ப்புகிட்டும் என தி.மு.க.தேர்தல் அறிவிப்பில் சொல்லப்பட்டதை நிறை வேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிகழ்வில் முன்னாள் மக்களவை உறுப்பினர்

ஏ.வி.பெல்லார்மின்

ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர்

டைமண்ட் , மாநிலத்தலைவர் கண்ணன்

அருட்பணி டோமினிக் எம். கடாட்சதாஸ், அருட்பணி ஜாண் பெனிட்டோ மற்றும் அருட் கன்னியர்களும் இந்த பட்டினி போராட்டத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை பங்கேற்றார்கள்.

Hindusthan Samachar / GOKILA arumugam