Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 22 பிப்ரவரி (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பழமை வாய்ந்த முனுகப்பட்டு பச்சையம்மன் ஆலயமாக விளங்கி வருகின்றன.
இந்த ஆலயத்தின் சிறப்பு திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் வசித்து வருகின்ற பெரும்பான்மையானவர்களின் குலதெய்வமாக இந்த பச்சையம்மன் ஆலயம் விளங்கி வருகின்றன.
இந்தக் கோவிலில் ஆடி மாதம் அனைத்து திங்கட்கிழமை சோமவரு நாட்களில் குலதெய்வ வழிபாடு செய்வது வழக்கமாகும். அப்பொழுது பச்சையம்மனுக்கு ஆடு,கோழி, பலியிட்டு பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.
இந்த ஆலயத்தில் அம்மனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பச்சை நிறத்தில் குங்குமம் தருவது சிறப்பம்சமாக உள்ளன.
இந்த அம்மனுக்கு நேர்த்திக்கடனாக பக்தர்கள் மொட்டை அடித்து, பொங்கல் வைத்து அம்மனுக்கு பச்சை நிறத்தில் புடவை, வளையல் காணிக்கையாக செலுத்துவது வழக்கமாகும்.
இந்நிலையில் இந்த கோவில் குடமுழுக்கு விழாவை நடத்த தமிழக இந்து அறநிலையத்துறை 1.28 கோடி நிதி ஒதுக்கப்பட்டது . கடந்த 10 தினங்களுக்கு முன்பு பந்தக்கால் நட்டு யாகசாலை அமைத்து பூஜை நடத்தி வந்தனர். பின்னர் முதல் கால பூஜை, நான்காம் கால பூஜை, கோ பூஜை ஆகியவை நடந்தேறியது.
மேலும் இன்று காலை ஸ்ரீ பச்சையம்மன் கோவில் ராஜகோபுரத்தில் புண்ணிய நதியிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை ஸ்ரீ பச்சையம்மன் காலத்தில் வைத்து பூஜித்து மேல் கோபுரத்தில் உள்ள கோபுரத்தில் புண்ணிய நதி நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் வரிசையாக நடைபெற்றது. பின்னர் பச்சையம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேகத்துக்கு விழாவில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு கும்பாபிஷேகம் செய்த புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டன. இந்த வீடியோ டிரோன் காட்சி மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கும்பாபிஷேகம் விழாவில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN