Enter your Email Address to subscribe to our newsletters

ஜார்சுகுடா, 22 பிப்ரவரி (ஹி.ச.)
ஒடிசா மாநிலம்,ஜார்சுகுடா நகரிலுள்ள சதர் காவல் நிலையத்திற்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை 49-ல் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் காவல்துறையினரின் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியதில் இந்த விபத்து நேரிட்டது.
இதில், அந்த வாகனத்தில் பயணம் செய்த 8 காவலர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 காவலர்கள் படுகாயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் ஒரு திருமண நிகழ்வில் கலந்துகொண்டு திரும்புகையில் இந்த துரதிர்ஷ்டவசமான விபத்து நிகழ்ந்துள்ளது.
காயமடைந்த காவலர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / JANAKI RAM