அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளுக்கான வரியை 15% ஆக உயர்த்தி அறிவிப்பு!
வாஷிங்டன், 22 பிப்ரவரி (ஹி.ச.) உலகளவில் நாடுகளின் மீது விதிக்கப்படும் வரியை 10 சதவீதமாக உயர்த்தியிருந்த நிலையில், தற்போது அதனை 15 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க பாராளும
அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளுக்கான வரியை 15% ஆக உயர்த்தி அறிவிப்பு!


வாஷிங்டன், 22 பிப்ரவரி (ஹி.ச.)

உலகளவில் நாடுகளின் மீது விதிக்கப்படும் வரியை 10 சதவீதமாக உயர்த்தியிருந்த நிலையில், தற்போது அதனை 15 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க பாராளுமன்றத்தை மீறி, சீனா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு எதிராக சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தை பயன்படுத்தி அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த வரி விதிப்பை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

இதனால் கோபமடைந்த டிரம்ப், தன்னுடைய வரி விதிப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உலக அரங்கில் தன்னை அவமானப்படுத்திவிட்டதாக குற்றம் சாட்டினார்.

மேலும், தனக்கு எதிராக தீர்ப்பளித்த 6 நீதிபதிகளை நினைத்து தான் வெட்கப்படுவதாகவும், 122வது சட்டப்பிரிவின் கீழ் அமெரிக்காவுடன் வியாபாரம் செய்யும் உலக நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட இருப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில் தற்போது 10 சதவீத வரியை 15 சதவீதமாக உயர்த்துவதாகவும், இந்த வரி உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM