Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழக வெற்றி கழகம் சார்பில் சட்டமன்ற தொகுதியளவிலான முதல் செயல்வீரர்கள் கூட்டம் சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில்,பொதுச் செயலாளர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் ஆர்ஜூனா , நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் , ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் உரையாற்றிய
ஆதவ் அர்ஜூனா,
தமிழகம் முழுவதும் தவெகவில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கான பொறுப்பு அனைத்து முக்கிய நிர்வாகிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது .
மா.செ சிவா குறுகிய காலத்திற்குள் 40 ஆயிரம் உறுப்பினர்களை பெரம்பூர் தொகுதியில் சேர்த்துள்ளார்
விஜய் படத்தை நான் அதிகம் பார்த்ததில்லை ஒரே ஒரு படமாக பிகில் படத்தைத்தான் நான் பார்த்துள்ளேன்.அந்த படத்தில் முக்கியமான காட்சியில், நம்ம ஏரியாலயே வந்து நம்ம ஆளுங்களயே அடிச்சுட்டாங்கணே னு ஓட்டுநர் விஜயிடம் கூறுவார். வண்டியை அவங்க இடத்துக்கே விடு என்று கூறுவார்.
அதற்கு ஓட்டுநர் நாம தனியா போறோம்ணே யாருமே இல்லணே என ஓட்டுநர் கூறினார்.
அப்போது என்னதான் நடக்கும் நடக்கட்டுமே பாடல் பின்னணியில் ஒலிக்கும். அங்கு சென்ற பின் வில்லன் ஒருவர் வருவார் ஸ்டாலின் போல அவர் இருப்பார்.
ஒரு புள்ள வந்து நிற்கும் இப்போ உள்ள புள்ள போல .
விஜயை பார்த்து அவர்கள் தொக்கா மாட்டிக் கிட்டான்ல என்று கூறுவார்கள் .ஆனால் கார் கதவு திறக்கும்போதே 5 பேர் பறந்து போய் விழுவான்.
துறைமுகம் தொகுதியில் அமைதியாக பிரசாரம் செய்த எங்கள் கட்சியின் கர்ப்பிணி பெண் வயிற்றில் நீங்கள் கை வைத்தபோதே முடிவாகிவிட்டது வட சென்னையில் தான் எங்கள் முதல் செயல்வீரர்கள் கூட்டம்.
அரசியலில் திமுகவுக்கு ரிட்டையர்மன்ட் கொடுத்து, உங்களை சிறைக்கு அனுப்ப உள்ளோம்.
சென்னையை திமுக கோட்டை என்பார்கள் . அதனால் எம்ஜிஆர் , ஜெ. கூட சென்னையில் அதிகம் நின்றதில்லை . ஆனால் இன்றிலிருந்து சென்னையில் தவெகதான்.
வட சென்னையில் சேகர்பாபு இருப்பதாக கூறுவார்கள்.
ஆனால் சேகர்பாபு படிச்ச ஸ்கூல்ல ஹெட் மாஸ்டர் நம்ம கூட இருக்காங்க சேகர்பாபு அண்ணே.
நீங்க எடுத்த பொருளை எடுத்தே உங்களை போடுவோம்.
திமுகவிடம் பேக்கேஜ் கட்சிகள் பல உள்ளன. கருணாநிதி குடும்பத்தை துரோகி என பேசிய வைகோ இன்று உதயநிதியை வருங்கால முதலமைச்சர் என்கின்றார்.
விஜயகாந்தை விஜய்க்கு ரொம்ப பிடிக்கும்.
கருணாநிதியின் குடும்பத்தை தூக்கி எரிய வேண்டும் என விஜயகாந்த் கடைசி வரை கூறி வந்தார்.
வடிவேலுவை வைத்து அவருக்கு எதிராக என்னவெல்லாம் பேசினர். திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்ததால் விஜயகாந்த் ஆன்மா சாந்தி அடையவே அடையாது.
திருமாவளவன் மீது பெரிய விமர்சனங்களை வைக்க முடியாது,ஆனால் நடிகர்கள் முதலமைச்சர் ஆக முடியாது என அவர் பேசுவது உதயநிதிக்கு எதிராகத்தான்.
நேற்று அதிமுக மாவட்ட செயலாளர் ஒருவர் என்னிடம் பேசினார், 8 ம் வகுப்பு படிக்கும் பெண் ஜனநாயகன் திரைப்படம் மே மாதம் விஜய் முதலமைச்சர் ஆனபின் திரைக்கு வரும் என்று கூறியதாம்.
தனது மகள் நான் முக்கியம் என்றால் ஈபிஎஸ்க்கு வாக்களிக்காமல் விஜய்க்கு வாக்களியுங்கள் என்று கூறியதாக சொன்னார்.
40 ஆண்டு ஒருங்கிணைந்த வட சென்னை மாவட்ட செயலாளராக அதிமுகவில் இருந்தவர் நான் தவெக விற்கு வருவதற்கு தயார் , ஆனால் திமுகவுடன் நீங்கள் காம்ப்ரமைஸ் சென்று விட மாட்டீர்களே என்று கேட்டார்.
நம் தலைவர் டெல்லியிலேயே காம்ப்ரமைஸ் செய்யவில்லை , திமுகவுடனா காம்ப்ரமைஸ் செய்வார்..? என்று கூறி இணைத்தோம்.
நம் தலைவருக்கு 51..52 வயதுதான் .அடுத்த 40 ஆண்டு தமிழகத்தை அவரால் ஆள முடியும்.
வட சென்னையில் ரவுடீசத்தை உருவாக்கியது திமுகதான்.
விஜய் பெரம்பூரில் நிற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம்.
கொளத்தூர் ,ஆர்.கே நகர் உள்ளிட்ட தொகுதியிலும் அவர் போட்டியிட விரும்பலாம்.
வட சென்னையில் ஏதேனும் ஒரு தொகுதியில் நிற்கத்தான் விஜய் விரும்புவார்.
நான் முன்மொழியும் தீர்மானத்தை அண்ணன் புஸ்ஸி ஆனந்த் வழிமொழிவார் என நினைக்கிறேன்.
என்று கூறினார்.
பின்னர் உரையாற்றிய புஸ்ஸி ஆனந்த்
பெரம்பூரில் விஜய் போட்டியிட வேண்டுமென்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறோம்.
உங்கள் விருப்பத்தை தலைவரிடம் சொல்ல போகிறேன்.
என்னடா நடக்குது இங்க.. என்று அண்ணன் செங்கோட்டையன் பார்த்து கொண்டிருக்கிறார் . ஒன்பது முறை எம்எல்ஏவாக இருந்த என்னை குறிப்பிட்ட நேரத்திற்குள் பேசி முடிக்க வேண்டும் என்கிறீர்கள், நீங்களே தீர்மானத்தை அறிவித்து நிறைவேற்றுகின்றீர்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்.
சென்னையில் உள்ள 16 தொகுதியும் தலைவரின் கோட்டையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
எங்கள் தலைவர் விஜய் முதல்வர் ஆனவுடன் சர்மா நகர், பி.வி.காலனி பகுதியில் ஜூலை மாதத்திற்குள் அனைவருக்கும் பட்டா வழங்கப்படும்.
அடுத்த வாரம் 234 சட்டப் பேரவை கொகுதியிலும் தவெக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
பெரம்பூர் தொகுதி ராசியான தொகுதி என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.என்றார்.
இந்த நிகழ்வில் செங்கோட்டையன் பேசியபோது,
அன்றைய நிலை வேறு இன்றைய நிலை வேறு .ஒரு ரூ. கூட கொடுக்காமல் காத்திருக்கும் கூட்டம் இங்குதான் உள்ளது.
15 கோடி செலவு செய்து மற்ற கட்சிகள் கூட்டம் கூட்டுகின்றனர்,நாம் ஒரு ரூ. செலவில்லாமல் கூட்டம் கூட்டுகிறோம்.
1972 ல் நான் அதிமுக தொடங்கியது முதல் உறுப்பினராக இருந்தவன்.
புரட்சி தலைவர் , புரட்சி தலைவியை தொடர்ந்து புரட்சி தளபதியை பார்க்கும் நாளுக்காக நான் காத்திருக்கிறேன்.
புரட்சி தலைவர் ,தலைவியை தொடர்ந்து தமிழகத்தை ஆளும் ஒரே சக்தி விஜய்க்கு மட்டுமே உண்டு.
2026 ல் 234 லும் விஜய்க்கே வெற்றி. பெரம்பூரில் நம்மை எதிர்க்கும் அனைவரும் டெபாசிட் தொகையை இழக்க வேண்டும்.என்றார்.
இந்த நிகழ்வில் ஜேசிடி பிரபாகர் பேசியது,
2011 ல் அதிமுக ஆட்சிக்கு வர காரணமே விஜய்தான். தனது மக்கள் இயக்கம் மூலம் அதிமுகவிற்கு வேலை செய்ய சொல்லியிருந்தார் விஜய்.
அப்போது பூக்கடை குமார் போன்ற நிர்வாகிகளால் வில்லிவாக்கம் தொகுதியில் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பேராசிரியர் அன்பழகனை நான் வெற்றி கண்டேன்.
வெட்டி வா என்றால் கட்டி வரும் கூட்டும் தவெக . இன்று மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். விஜய் வருவார்...வந்து கொண்டிருக்கிறார்... மீண்டும் ஒரு எம்ஜிஆரை பார்க்க விரும்பும் மக்களுக்கு விஜய் தான் தேர்வு என்று பேசினார்.
Hindusthan Samachar / P YUVARAJ