குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ராணி வேலுநாச்சியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை 
சிவகங்கை, 22 பிப்ரவரி (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சவுமிய நாராயணப் பெருமாள் கோயில் தங்கக் கோபுர கும்பாபிஷேகம் பிப்ரவரி 6-ம் தேதி நடைபெற்றது. இதற்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ண
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ராணி வேலுநாச்சியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை 


சிவகங்கை, 22 பிப்ரவரி (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சவுமிய நாராயணப் பெருமாள் கோயில் தங்கக் கோபுர கும்பாபிஷேகம் பிப்ரவரி 6-ம் தேதி நடைபெற்றது.

இதற்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இன்று அக்கோயிலுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் வந்தார். இதற்காக அவர் மதுரையிலிருந்து ஹெலிகாப்டரில் திருப்பத்தூர் வந்தார்.

அவரை கார்த்திசிதம்பரம் எம்பி, மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அங்கிருந்து காரில் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோயிலுக்கு வந்தார். தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்தார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாவட்டத் தலைவர் பாண்டித்துரை ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர், காரில் சிவகங்கை அரண்மனைக்கு வந்த அவரை சமஸ்தானம் தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார், சமஸ்தான மகேஸ்துரை, இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அரண்மனை வளாகத்தில் இருந்த மன்னர் சசிவர்ணதேவர், ராணி வேலுநாச்சியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர்,அரண்மனை பொருட்களையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ராணி வேலுநாச்சியார் மட்டும் தான் இழந்த அரசை போர் புரிந்து மீண்டும் கைப்பற்றியவர்.

வீரம் விளைந்த மண் சிவகங்கை. மகத்தான சரித்திரத்துக்கு சொந்தமானது. மத்திய, மாநில அரசுகள் எப்போதும் இணைந்து செயல்படுவது தான் ஒரு பகுதி முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்திருந்தார். அதை 18 சதவீதமாக குறைத்துள்ளனர். நிச்சயமாக இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.என்று தெரிவித்தார்.

தொடர்ந்து காவி உடைந்து அணிந்து சிலைகளுக்கு மரியாதை செலுத்தியுள்ளீர்களே, அதில் எதுவும் விஷேசம் உண்டா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு, நீங்கள் கூட வயது முதிர்வு அடைந்தால் காவி உடைக்கு மாறி விடுவீர்கள்.

அதற்கு, நீங்கள் கூட வயது முதிர்வு அடைந்தால் காவி உடைக்கு மாறி விடுவீர்கள், என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b